Paristamil Navigation Paristamil advert login

டொரொண்டோவில் கட்டிடம் வெடிப்பு -7 பேர் மருத்துவமனையில் அனுமதி

டொரொண்டோவில் கட்டிடம் வெடிப்பு -7 பேர் மருத்துவமனையில் அனுமதி

15 ஐப்பசி 2025 புதன் 06:36 | பார்வைகள் : 181


கனடாவின் நோர்த் யார்க் (North York) பகுதியில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தில்  காலை ஏற்பட்ட வெடிப்பில் ஏழு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இதில் நான்கு பேரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை 9.20 மணியளவில் எஸ்தர் ஷைனர் புல்வர்ட் (Esther Shiner Boulevard) மற்றும் மெக்மகான் டிரைவ் (McMahon Drive) சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்றதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“வாயு வெடிப்பு ஏற்பட்டதாக எங்களிடம் தகவல் வந்தது. சிலர் எரி காயங்களுடன் இருந்தனர். ஆனால், எங்கள் குழு வந்தபோது கட்டிடத்தில் தீ இல்லை என தடொரொண்டோ தீயணைப்பு சேவை அதிகாரி பால் ஓ’பிரையன் தெரிவித்துள்ளார்.

வெடிப்பு கட்டிடத்தின் 22ஆம் மாடியில் உள்ள பென்ட்ஹவுஸ் மெக்கானிக்கல் அறையில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் இருந்த நான்கு தொழிலாளர்கள் தீவிர காயங்களுடன், மேலும் மூன்று பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

டொரொண்டோ தீயணைப்பு துறையிலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.

கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்