Paristamil Navigation Paristamil advert login

அமைச்சர்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை: சென்னை ஐகோர்ட் வேதனை

அமைச்சர்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை: சென்னை ஐகோர்ட் வேதனை

14 ஐப்பசி 2025 செவ்வாய் 08:42 | பார்வைகள் : 100


அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை. மற்றவர்கள் மீதான வழக்கில் வந்தே பாரத் ரயில் போல வேகம் காட்டப்படுகிறது,'' என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில், பல்வே று பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால், அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், அமைச்சர்கள், எம்பிக்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை. மற்றவர் வழக்கில் வந்தே பாரத் ரயில் போல் வேகம் காட்டப்படுகிறது எனக்கூறியதுடன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக மத்திய அரசின் அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் கால அவகாசம் அளித்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்