அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் பயங்கர துப்பாக்கி சூடு - 4 பேர் உயிரிழப்பு
13 ஐப்பசி 2025 திங்கள் 11:15 | பார்வைகள் : 633
அமெரிக்காவில் மதுபான கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெற்கு கரோலினா மாகாணத்தின் செயிண்ட் ஹெலினா தீவில் மக்கள் கூட்டமாக இருந்த மதுபான கேளிக்கை விடுதி ஒன்றில் திடீரென பயங்கரமான துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டு இருப்பதுடன், 20 பேர் படுகாயமடைந்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அங்கிருந்த மக்கள் பீதியில் ஓடி அருகில் இருந்த வணிக வளாகங்களில் ஒளிந்து கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் நான்கு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவத்தை அரங்கேற்றிய சந்தேக நபர்களை பிடிக்கும் பணியில் பொலிஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan