Paristamil Navigation Paristamil advert login

காஸா போன்று யுக்ரேனிலும் அமைதி வேண்டும்! - மக்ரோன் வலியுறுத்தல்!!

காஸா போன்று யுக்ரேனிலும் அமைதி வேண்டும்! - மக்ரோன் வலியுறுத்தல்!!

13 ஐப்பசி 2025 திங்கள் 07:47 | பார்வைகள் : 417


காஸா போன்று யுக்ரேனிலும் அமைதியை கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவந்த இந்த சந்தர்ப்பத்தில் யுக்ரேனை மறந்துவிடக்கூடாது என தெரிவித்த மக்ரோன், நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வழியாக யுக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கியுடன் உரையாடியதாகவும் தெரிவித்தார்.

“காஸாவில் ஒப்பந்தம் கொண்டுவரப்பட்ட நிலையில், மத்திய கிழக்கிலும் அமைதியை கொண்டுவரவேண்டும். யுக்ரேனிலும் அமைதியை கொண்டுவரவேண்டும். யுத்தங்களை நாம் முடித்துக்கொள்ள வேண்டும்!” என மக்ரோன் வலியுறுத்தினார்.

அத்தோடு, “ரஷ்யா தனது போர்க்குணமிக்க பிடிவாதத்தையும் பேச்சுவார்த்தை மேசைக்கு வர மறுப்பதையும் தொடர்ந்தால், அதற்கான விலையை அது கொடுக்க வேண்டியிருக்கும்." எனவும் எச்சரித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்