Paris மற்றும் Antananarivo இடையிலான Air France விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்!!
12 ஐப்பசி 2025 ஞாயிறு 17:55 | பார்வைகள் : 4102
மடகஸ்காரில் நடந்து வரும் அரசியல் நெருக்கடியால், ஏர் பிரான்ஸ் தனது பரீஸ் - அண்டானனாரிவோ (மடகாஸ்கர்) இடையிலான விமானங்களை திங்கள் வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தினசரி நிலைமையை மதிப்பீடு செய்த பிறகு மட்டுமே விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், Air Austral ஒரு விமான சேவையை ரத்து செய்தபோதும், ஞாயிறு சேவைகள் தொடர்ந்து இயங்குகின்றன.
செப்டம்பர் இறுதியில் இருந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் மடகஸ்காரில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர், இதில் சில இராணுவத்தினரும் சேர்ந்துள்ளனர்.
ஜனாதிபதி Andry Rajoelina இதை சட்டவிரோத ஆட்சிப்பிடிப்பு முயற்சி என விமர்சித்துள்ளார். புதிய பிரதமர் Ruphin Zafisambo, அரசு நிலைத்திருக்கிறது என்றும் அனைத்து தரப்புகளுடனும் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan