ஆஸ்திரேலியா குளோபல் வர்த்தக மாநாடு

12 ஐப்பசி 2025 ஞாயிறு 08:45 | பார்வைகள் : 218
ஆஸ்திரேலியா சிட்னியில் டிசம்பர் 6ம் திகதி முதல் 7ம் திகதி வரை நடைபெறும் 12 குளோபல் வர்த்தக மாநாடு NSW மாநில அரசு அனுசரணையுடன் நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் இந்தியாவில் உற்பத்தியாகும் விவசாய பொருட்களுக்கு தனி அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்நிகழ்வில் இந்திய தமிழக அரசின் கீழ் இயங்கும் விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள் பங்கேற்க உள்ளன.
இம்மாநாட்டில் பங்கேற்று தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு இந்தியா மற்றும் தமிழக அரசின் வேளாண்மை துறை மானியங்கள் வழங்கப்பட உள்ளன.
விவசாயிகளின் வாழ்வில் அக்கறையுள்ள இந்திய மற்றும் தமிழக அரசு நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை உலக சந்தையில் போட்டியிடவும், ஏற்றுமதி துறையில் விவசாயிகள் தன்னிறைவு அடையவும், இம்மாநாடு அமையும் என உலகத்தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
மேலும் இந்திய ஆஸ்திரேலிய வர்த்தக உடன்படிக்கைப்படி இருநாட்டு வர்த்தகர்களும் பயன்பெறும் வகையில் அமைய உள்ளது.
நம் நாட்டின் விவசாயத் துறையின் வளர்ச்சியை பற்றி இந்திய மற்றும் தமிழக அரசு அதிகாரிகள், குளோபல் கனெக்ட் கான்ஃபரன்சில் உரையாற்ற உள்ளனர் எனவும் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் (+60166167708) என உலக தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.