"அவர்கள் படுகொலை செய்வார்கள்": அச்சுறுத்தும் கடிதம் Notre-Dameஇல் கண்டுபிடிப்பு!!

11 ஐப்பசி 2025 சனி 15:05 | பார்வைகள் : 817
பரிஸில் உள்ள Notre-Dame பேராலயத்தில் வெள்ளிக்கிழமை ஒரு மர்மமான கடிதம் கண்டெடுக்கப்பட்டு ள்ளது. இந்த கடிதத்தில், அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தேவாலயத்தைத் திறக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்துள்ளது.
கடிதம் எழுதியவர், சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கத்திகளை தேவாலயத்தில் மறைத்து வைத்துள்ளனர், அவர்கள் படுகொலை செய்வார்கள் என குறிப்பிட்டிருந்தார். உடனடியாக பாதுகாப்பு குழு தேவாலயத்தை ஆய்வு செய்தது, ஆனால் எந்தவித ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. சனிக்கிழமை காலை, தேவாலயம் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளது.
இது போன்ற எச்சரிக்கை ஏற்கனவே ஏப்ரல் மாதத்திலும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது, அப்போது ஈஸ்டர் வார இறுதியில் தாக்குதல் நடக்கும் என கூறிய கடிதம் தேவாலயத்தில் கிடைத்தது. அந்த நேரத்தில் அதிகாரிகள் விசாரணை தொடங்கி, மிரட்டல் மற்றும் பொய்யான தகவல்களின் வழக்குகள் பதிவு செய்தனர். தற்போதைய கடிதம் அதே நபரால் எழுதப்பட்டதா என்பது தெளிவாகவில்லை, ஆனால் தேவாலய நிர்வாகம் புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.