பாடசாலை அருகே துப்பாக்கிச்சூடு - பரபரப்பு!!

11 ஐப்பசி 2025 சனி 14:11 | பார்வைகள் : 466
பாடசாலை அருகே துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
d’Achères (Yvelines) நகரில் இச்சம்பவம் ஒக்டோபர் 10, நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Joliot-Curie பாடசாலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் அருகே திடீரென பாரிய சத்தத்துடன் துப்பாக்கி முழக்கம் கேட்டது. அதை அடுத்து பாடசாலையில் பெரும் குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது.
காவல்துறையினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் எவரும் காயமடையவில்லை என்றபோதும், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைகளின் முடிவில், காவல்துறை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.