ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை... நோபல் கமிட்டி விளக்கம்

10 ஐப்பசி 2025 வெள்ளி 14:58 | பார்வைகள் : 181
நோபல் பரிசை எதிர்பார்த்து காத்திருந்த ட்ரம்புக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ள நிலையில், வெனிசுலா நாட்டவரான மரியா கொரினோ (María Corina Machado) என்னும் அரசியல்வாதி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனநாயக ஆர்வலர் என்னும் பன்முகம் கொண்டவரான பெண்ணுக்கு அந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ட்ரம்புக்கு ஏன் ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு நோபல் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ’ நோபல் பரிசை யாருக்குக் கொடுப்பது என்னும் முடிவு, பணி மற்றும் நோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபலின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறியுள்ளது நோபல் கமிட்டி.
மேலும், இந்தக் குழு நோபல் பரிசு பெற்ற அனைவரின் உருவப்படங்கள் நிரம்பிய ஒரு அறையில் அமர்ந்திருக்கிறது, அந்த அறை தைரியத்தாலும் நேர்மையாலும் நிரம்பியுள்ளது.
எனவே, பணி மற்றும் ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்தை மட்டுமே நாங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார் நோபல் கமிட்டியின் தலைவரான Jørgen Watne Frydnes.
இதற்கிடையில், நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை நாமினேட் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நாமினேஷன் செய்யப்படவேண்டிய திகதிக்குப் பின்தான் அவரது பெயர் நாமினேட் செய்யப்பட்டதாம்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான நாமினேஷன் 2025, பிப்ரவரி 1ஆம் திகதிக்கு முன் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால், ட்ரம்பின் நாமினேஷன் அதற்குப் பிறகுதான் செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.