சீன நெடுஞ்சாலையில் நிரம்பி வழிந்த கார்கள்

10 ஐப்பசி 2025 வெள்ளி 10:48 | பார்வைகள் : 246
சீனாவில் வுசுவாங்க் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் 8 நாட்கள் விடுமுறையை முடித்து விட்டு மில்லியன் கணக்கான மக்கள் வீடு திரும்பிய போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அக்டோபர் 6ம் திகதி இந்த போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது.
வுசுவாங் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம், X போன்ற சமூக ஊடகங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் பிற வாகனங்கள் 36 பாதைகள் கொண்ட சாலையை நிரப்பிய வண்ணம் ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.
சீனாவின் கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு விடுமுறையின் போது சுமார் 888 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஏழு நாள் விடுமுறையின் போது 765 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சீனாவில் இத்தகைய போக்குவரத்து நெரிசல் முன்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.