பொருளாதாரத்தில் முன்னேற்றம்!!

9 ஐப்பசி 2025 வியாழன் 23:44 | பார்வைகள் : 1295
இவ்வருடத்தின் மூன்றாவது காலாண்டில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) ஒரு நிலையற்ற தன்மை கொண்டிருந்தாலும், இவ்வருடத்தின் மூன்றாவது காலாண்டில் 0.3% சதவீத முன்னேற்றம் கண்டுள்ளது என பிரெஞ்சு வங்கி (Banque de France) தெரிவிக்கிறது. ஒவ்வொரு மாதமும் இந்த GDP கணக்கிடப்படுகிறது. அதன் முடிவில் இந்த முன்னேற்றத்தை கண்டதாகவும், மீதமுள்ள நான்காவது காலாண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் உள்ள பெரும் நிறுவனங்கள், நிதி மேலான்மை நிறுவனங்கள் என பல்வேறு துறைகள் இந்த மூன்றாவது காலாண்டில் கணிசமான வருவாயை ஈட்டியதாகவும், ஏற்றுமதியில் பெரும் அதிகரிப்பை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.