Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்–ஹமாஸ் அமைதி முயற்சி - ஐ.நா. ஆதரவு

இஸ்ரேல்–ஹமாஸ் அமைதி முயற்சி  -  ஐ.நா. ஆதரவு

9 ஐப்பசி 2025 வியாழன் 11:44 | பார்வைகள் : 809


இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான முதல்கட்ட அமைதி ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் - ஹமாஸ் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து குட்டெரெஸின் அறிக்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்குமாறு குட்டெரெஸ் இருதரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் கண்ணியமான முறையில் விடுவிக்க வேண்டும் என்பதோடு அத்தியாவசிய பொருட்கள் காஸாவுக்குள் உடனடியாகவும், தடையின்றியும் செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் இரு நாடுகள் தீர்வுக்கான நம்பகமான அரசியல் பாதையாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்பட வேண்டும் என்று குட்டெரெஸ் மேலும் கூறியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்