Paristamil Navigation Paristamil advert login

காய்ச்சல் தொற்றினால் 17,000 மரணங்கள் பதிவு!!

காய்ச்சல் தொற்றினால் 17,000 மரணங்கள் பதிவு!!

8 ஐப்பசி 2025 புதன் 17:30 | பார்வைகள் : 478


காய்ச்சல் தொற்றினால் பிரான்சில் கடந்த குளிர்காலத்தில் 17,000 மரணங்கள் பதிவானதாக பிரெஞ்சு பொது சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

வருடத்துக்கு சராசரியாக காய்ச்சல் தொற்றின் காரணமாக 10,000 பேர் வரை இறக்கும்  நிலையில், சென்ற 2024 ஆம் ஆண்டு குளிர் காலத்தில் மட்டும் 17,600 பேரின் சாவுக்கு இந்த காய்ச்சல் காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “மிக கணிசமான மற்றும் தீவிரமான அதிகரிப்பு” என பொது சுகாதாரத்துறையின் இயக்குனர் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாகவும், 54% சதவீதமானவர்களே தடுப்பூசி போட்டுக்கொள்ளுவதாகவும், இந்த எண்ணிக்கை கட்டாயமாக அதிகரிக்கப்படவேண்டும் எனவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளுவது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

வர்த்தக‌ விளம்பரங்கள்