Paristamil Navigation Paristamil advert login

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவருக்கு காசா பற்றி கவலை ஏன்? அண்ணாமலை கேள்வி

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவருக்கு காசா பற்றி கவலை ஏன்? அண்ணாமலை கேள்வி

9 ஐப்பசி 2025 வியாழன் 08:26 | பார்வைகள் : 102


கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை முதல்வர் ஸ்டாலினுக்கு எதற்கு? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

வரும் அக் 14ம் தேதி சட்டசபை கூட்டத்தொடரில் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை கோரியும் தீர்மானம் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதற்கு பதில் அளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:

* கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை முதல்வர் ஸ்டாலினுக்கு எதற்கு?

* உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா?

* பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்?

* கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்