Paristamil Navigation Paristamil advert login

வி.சி., கட்சியினரால் ஐகோர்ட் அருகே பதற்றம் ! திருமா விளக்கம்

வி.சி., கட்சியினரால் ஐகோர்ட் அருகே பதற்றம் ! திருமா விளக்கம்

8 ஐப்பசி 2025 புதன் 11:34 | பார்வைகள் : 146


இளைஞர் தாக்கப்பட்டது குறித்து திருமாவளவன் கூறியதாவது: நான் வந்த கார் முன்பாக, இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் என்னை பார்த்துக் கொண்டே தான் சென்றார். அந்த இளைஞர், திடீரென வண்டியை நிறுத்தினார். கத்திக் கொண்டே காரை நோக்கி வந்தார். உடனே, வண்டி யை நிறுத்த வேண்டாம், முன்னே எடுத்து செல்லுங்கள் என்றேன்.

வண்டியை மேற்கொண்டு செலுத்த முடியாதவாறு, தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, என் வண்டியை நோக்கி, கைகளை அசைத்துக் கொண்டே வந்தார். வண்டியில் நான் அமர்ந்து இருக்கிறேன் என்று தெரிந்தும், வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தார்.

கட்சியை சார்ந்தோர், அவரை தள்ளிப்போகச் சொல்ல, அவர்களை வம்பிழுத்து பேசினார். இந்நிலையில் தான், வி.சி.,யினரில் ஓரிருவர், அவர் மீது கையால் ஓங்கி அடிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் அவரை, தமிழ்நாடு பார் கவுன்சில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர்.

இதுதான் நடந்தது. ஆனால், அண்ணாமலை போன்றோர் வக்காலத்து வாங்கி கொண்டு வருகின்றனர். இந்த திசைதிருப்பும் மு யற்சியை முறியடிக்கும் வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதி செருப்பு வீச முயன்ற வழக்கறிஞரை கைது செய்ய வலியுறுத்தி, மாவட்டந்தோறும் வி.சி.,யினர் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்