€36,000 செலவுகளை திருப்பித் தர விரும்பும் பரிஸ் 8ஆம் வட்டார மேயர்!!

7 ஐப்பசி 2025 செவ்வாய் 21:09 | பார்வைகள் : 509
பரிஸ் 8வது வட்டார மேயர் ஜீன் ட்’ஒட்டெஸேர் (Jeanne d’Hauteserre), தனக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவ நிதியிலிருந்து சுமார் 36,000 யூரோவுக்களுக்கு ஆடைகள் வாங்கியிருப்பது குறித்து சர்ச்சையை சந்தித்துள்ளார்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், “நான் நன்றாகத் உடையணிந்து இருக்க விரும்பினேன்” என்று கூறியதாலும், “வேலை செய்கிற மக்களுக்கு நன்றி” என்ற அவரது வெளிப்பாடுகளாலும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து, அவர் இந்த தொகையை திருப்பித் தர விரும்புவதாகவும், நெறிமுறை ஆணைக்குழுவை அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது செலவுகள் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட செலவுகளாக இருந்தாலும், பொதுமக்கள் அதற்கு எதிராக அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். எனவே, சட்ட அனுமதி இருந்தாலும் கூட, அவர் பணத்தை திருப்பித் தரும் முதல் மேயராக இருப்பார் என்று கூறியுள்ளார். மற்ற மேயர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று அவர் நம்புகிறார். இது பரிஸ் நகர அரசியலில் சலுகைகளுக்கு முடிவுக்கான ஒரு தொடக்கம் ஆகுமா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.
அவரை தவிர, சமீபத்தில் மற்ற சில மேயர்களும் இதுபோன்ற செலவுகளுக்காக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, பரிஸ் மேயர் அன் ஹிடல்கோ (Anne Hidalgo) மற்றும் அவரது நெருங்கிய ஆதரவாளர், 18வது மாவட்ட மேயர் எரிக் லெஜொன்றும் (Éric Lejoindre) இதே போன்ற கேள்விக்குள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1