Paristamil Navigation Paristamil advert login

இயற்பியலுக்கான நோபல் பரிசு! - பிரெஞ்சு இயற்பியலாளருக்கு விருது!!

இயற்பியலுக்கான நோபல் பரிசு! - பிரெஞ்சு இயற்பியலாளருக்கு விருது!!

7 ஐப்பசி 2025 செவ்வாய் 19:07 | பார்வைகள் : 323


பிரெஞ்சு இயற்பியலாளர்  Michel Devoret இற்கு நோபர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான் இயற்பியல் துறைக்கான நோபர் பரிசுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

மொத்தமாக மூவருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு நபர் ஒருவருக்கு, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியலாளர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு இயற்பியலாளரான 72 வயதுடைய Michel Devoret இற்கு விருது அறிவிக்கப்படதை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்று வாழ்த்தினை பகிர்ந்துள்ளார்.

“நாட்டுக்கு மிகப்பெரும் பெருமை!” என ஜனாதிபதி மக்ரோன் தனது X சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த John Clarke மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த John Martinis ஆகிய இருவருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

வர்த்தக‌ விளம்பரங்கள்