Paristamil Navigation Paristamil advert login

Babybel முதல் Petit Nesquik வரை குழந்தைகளுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் பத்து பால் பொருட்கள்!!!

Babybel முதல் Petit Nesquik வரை குழந்தைகளுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் பத்து பால் பொருட்கள்!!!

7 ஐப்பசி 2025 செவ்வாய் 15:30 | பார்வைகள் : 573


Foodwatch என்ற நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, les Mini Rolls de , Kiri Goûter, les Petits Filous, les yaourts Smarties, P'tit Louis, Danonino, P'tite Danette,  Nesquik Petit et compagnie போன்ற பத்து பால்பொருட்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்றவை எனக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த பொருட்கள் அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு  கொண்டவையாகும். 

உலக சுகாதார அமைப்பின் சத்துசார்ந்த உணவுக்கான வழிகாட்டுதல்களை இந்த உணவுகள் பின்பற்றவில்லை. அதிகம் இவை சாப்பிடுவது குழந்தைகளில் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என Santé Publique France எச்சரிக்கிறது.

இவை ஆரோக்கியமற்றவை என்றாலும், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை கவரும் வகையில் விளம்பரங்கள் நடத்தப்படுகின்றன. கார்டூன் கதாபாத்திரங்கள், விளையாட்டு, வரைகலை, மற்றும் "விற்றமின் D, கல்சியம்" போன்ற வாசகங்கள் மூலம் இது புரியாமல் வாடிக்கையாளர்களைத் தாக்குகின்றன. இதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புட்வாட்ச் கோருகிறது. ஆனால், அரசாங்கம் தாமதித்து வருகிறது என்பதால், புட்வாட்ச் மற்றும் 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் சேர்ந்து முறையிட்டுள்ளன. தற்போது, ஒரு மனுவும் தொடங்கப்பட்டுள்ளது, அதில் ஏராளமானோர் கையொப்பமிட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்