Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் அலுவலகத்துக்கு அருகே பாரிய தீ! - பாதுகாப்பு ஏற்பாடு!!

பிரதமர் அலுவலகத்துக்கு அருகே பாரிய தீ! - பாதுகாப்பு ஏற்பாடு!!

7 ஐப்பசி 2025 செவ்வாய் 15:12 | பார்வைகள் : 375


பிரதமர் அலுவலகத்துக்கு அருகே சில மீற்றர் தூரத்தில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 ஆம் வட்டாரத்தின் rue de Varennes வீதியில் எரிவாயு குடுவைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பெரும் கரும்புகை வானில் பரவி அப்பகுதியை பரபரப்பாக்கியது.

தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. போக்குவரத்து விதிகள் மாற்றியமைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.

பிரதமர் Sébastien Lecornu பதவி விலகி, பிரதமர் அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னர், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்