கலிபோர்னியா அதிவேக நெடுஞ்சாலையில் ஹெலிகொப்டர் விபத்து

7 ஐப்பசி 2025 செவ்வாய் 09:28 | பார்வைகள் : 199
அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்தில் சாக்ரமெண்டோ நகரில் செவ்வாய்க்கிழமை 07.10.2025 ஹெலிகொப்டர் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 03 பேர் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்குள்ளான மருத்துவ ஹெலிகொப்டர் சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் இருந்து புறப்பட்டது என தெரியவந்துள்ளது.
ஹெலிகொப்டர் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் கட்டுப்பாட்டை இழந்து சுழன்று கொண்டிருந்த சிறிது நேரத்தில் தரையில் விழுந்துள்ளமை காணொளியில் பதிவாகியுள்ளது.
ஹோவ் அவென்யூ அருகே நெடுஞ்சாலை 50 இன் கிழக்கு நோக்கிய பாதையில் இரவு 7.10 மணியளவில் (உள்ளூர் நேரம்) இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குப் பின்னர் நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து உடனடியாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1