Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரஞ்சு-ஜெர்மன் இளைஞன் விடுவிக்கப்பட்டார்!!

ஈரானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட  பிரஞ்சு-ஜெர்மன் இளைஞன் விடுவிக்கப்பட்டார்!!

6 ஐப்பசி 2025 திங்கள் 20:56 | பார்வைகள் : 1437


ஈரான் நாட்டில் "உளவுப்பணி" குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த பிரான்ஸ்-ஜேர்மனியை சேர்ந்த இளைஞர் லென்னார்ட் மொண்டர்லோஸ் (Lennart Monterlos), நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். 

18 வயதான அவர், 35 நாடுகள் கடக்கும் சைக்கிள் பயணத்தின் போது ஜூன் 16 அன்று Bandar-Abbas (sud de l’Iran) பகுதியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், புரட்சிகர நீதிமன்றம் உரிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை நிரபராதி என தீர்மானித்துள்ளது.

மேலும், 2022ம் ஆண்டு முதல் ஈரானில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பிரஞ்சு தம்பதிகள் செசில் கோலர் மற்றும் ஜாக் பாரிஸ் ஆகியோரின் விடுதலைக்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக இரான் தெரிவித்துள்ளது. அவர்களை விடுவிக்க, பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ள ஈரானிய பெண் மக்தியே எஸ்பந்தியாரியின் விடுதலை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் இதை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் முடிவுகள் வெளியாகும் எனவும் ஈரானிய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்