பாராளுமன்றத்தைக் கலையுங்கள்! - மீண்டும் சிக்கலில் அரசு!!

6 ஐப்பசி 2025 திங்கள் 10:10 | பார்வைகள் : 889
பிரெஞ்சு பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, மீண்டும் பொதுத்தேர்தலை நடாத்துமாறு கோரிக்கைகள் வலுக்கின்றன.
புதிய பிரதமர் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கழித்து, நேற்றைய தினம் அமைச்சர்கள் அறிவிக்கப்படனர். புதிய அரசாங்கம் இன்னும் பதவியேற்காத நிலையில், பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரிக்கைகள் வலுத்துள்ளன. அதில் இறுதியாக Rassemblement national கட்சி பாராளுமன்ற உறுப்பினரான Jean-Philippe Tanguy அதே கருத்தை முன்வைத்தார்.
“எவ்வளவு விரைவாக பாராளுமன்றத்தைக் கலைக்க முடியுமோ.. கலைத்துவிட்டு மீண்டும் பொதுத்தேர்தலை நடாத்தவேண்டும். பிரெஞ்சு மக்கள் மீண்டும் வாக்குச்சாவடிகள் நோக்கிச் செல்லவேண்டும்!” என அவர் தெரிவித்தார்.
“பிரெஞ்சு மக்கள் நடுவீதியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்!” எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, புதிய அரசாங்கத்தை Rassemblement national கட்சியினர் தணிக்கை செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1