Paristamil Navigation Paristamil advert login

காஸாவுக்கு படகுப்பயணம்! - தடுத்துவைக்கப்பட்டுள்ள 28 பிரெஞ்சு நபர்கள் இன்று திரும்புகின்றனர்!!

காஸாவுக்கு படகுப்பயணம்! - தடுத்துவைக்கப்பட்டுள்ள 28 பிரெஞ்சு நபர்கள் இன்று திரும்புகின்றனர்!!

6 ஐப்பசி 2025 திங்கள் 08:48 | பார்வைகள் : 563


காஸாவுக்கு படகில் பயணித்து, அங்கு இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 பிரெஞ்சு நபர்கள் இன்று விடுக்கப்பட உள்ளனர்.

அவர்கள் இன்று ஒக்டோபர் 6, திங்கட்கிழமை கிரிஸ் நாட்டுக்கு திரும்புகின்றனர். குறித்த 28 பேர் உள்ளடங்கலாக 400 வரையான தன்னார்வ தொண்டர்கள் பல்வேறு படகுகள் மூலம் காஸாவை நோக்கிச் சென்றிருந்தனர். அவர்கள் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர். Ktziot சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள அவர்கள், இன்று கிரீசுக்கு திருப்பு அனுப்பட உள்ளனர்.

பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சக ஊடக பேச்சாளர் Pascal Confavreux தெரிவிக்கையில், “தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை தொடர்புகொண்டோம். அவர்களது குடுப்பத்தினரோடு உரையாட அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. அவர்கள் நாளை (*இன்று திங்கட்கிழமை) விடுவிக்கப்பட உள்ளனர்!” என குறிப்பிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்