Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு!

6 ஐப்பசி 2025 திங்கள் 10:16 | பார்வைகள் : 207


ஜப்பானின் ஆளும் பழமைவாதக் கட்சியான லிபரல் டெமோகிரடிக் பார்ட்டி (LDP)  அதன் புதிய தலைவராக சனே தகைச்சியை (Sanae Takaichi) தேர்ந்தெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

64 வயதான சனே தகைச்சி, ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷிகெரு இஷிபாவுக்குப் பதிலாக புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, ஒக்டோபர் 15ஆம் திகதி அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.


சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தில் மோசமாக இருக்கும் ஒரு நாட்டில், ஜப்பானின் நீண்டகாலமாக ஆளும் பழமைவாத லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் முதல் பெண் தலைவராக தகைச்சி வரலாற்றைப் படைத்துள்ளார்.

ஆணாதிக்கக் கட்சியின் மிகவும் பழமைவாத உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர் காணப்படுகிறார்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் அபிமானியான தகைச்சி, முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர பழமைவாதக் கண்ணோட்டத்தின் சீடரும், ஜப்பானின் போர்க்கால இராணுவவாதத்தின் அடையாளமாகக் கருதப்படும் யசுகுனி ஆலயத்தில் வழக்கமாகச் செல்வவருமாவார்.


குறித்த ஆலயம் ஜப்பானின் போர்க்கால இராணுவவாதத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.


சனிக்கிழமை இன்று(03) லிபரல் டெமோகிரடிக் பார்ட்டி (LDP) கட்சி நடத்திய உட்கட்சி வாக்கெடுப்பில், பிரபல முன்னாள் பிரதமர் ஜூனிச்சிரோ கொய்சுமியின் மகனும் விவசாய அமைச்சருமான ஷின்ஜிரோ கொய்சுமியை தகைச்சி தோற்கடித்தார்.

பெரும் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு பொதுமக்களின் ஆதரவை மீண்டும் பெற்று ஆட்சியில் நீடிக்க கட்சி நம்பிக்கையுடன் இருப்பதாக அந்த நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்