உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் - ஜெலென்ஸ்கி வெளியிட்ட முக்கிய தகவல்

6 ஐப்பசி 2025 திங்கள் 06:16 | பார்வைகள் : 262
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சமீபத்திய ட்ரோன் தாக்குதலில் 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய சமீபத்திய ட்ரோன் தாக்குதலில் 5 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் ரஷ்யா 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 500க்கும் அதிகமான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த தாக்குதலில் உக்ரைனின் ல்விவ், இவனோ - பிராங்கிவ்ஸ்க், சபோரிஜியா கார்கிவ், கெர்சன், சுமி, ஒடேசா ஆகிய பல நகரங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.
போலந்து எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ள ல்விவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சபோரிஜியாவில் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக அப்பகுதியின் பிராந்திய ஆளுநர் அறிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவின் இந்த பயங்கர தாக்குதலில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் தொடர் குண்டுவீச்சுகள் காரணமாக உக்ரைனின் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர், சபோரிஜியாவில் மட்டும் சுமார் 73,000 க்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1