Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி நியமித்த 18 புதிய அமைச்சர்கள்! - இரண்டு புதியவர்கள்!

ஜனாதிபதி நியமித்த 18 புதிய அமைச்சர்கள்! - இரண்டு புதியவர்கள்!

6 ஐப்பசி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 1228


நேற்று ஒக்டோபர் 5, ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 18 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார். 35 தொடக்க்கம் 26 பேர் வரை இருக்கும் அமைச்சர்களில் முதல்கட்டமாக இந்த 18 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய அரசாங்கத்தில் இருந்தவர்களில் சிலர் அதே பதவியில் தொடர, சிலர் வேறு அமைச்சு பதவிகளை மாற்றி பெற்றுக்கொண்டனர். அத்தோடு முன்னர் எப்போதும் அரசாங்கத்தில் இல்லாத இருவர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

அமைச்சர்களுக்கான அழைப்பினை முன்னாள் பிரதமர் எத்துவார் பிலிப் மற்றும் கேப்ரியல் அத்தால் ஏற்றுக்கொள்ளவில்லை. 
● ● ● ● ● ● ● ● ● ● ● ● ●

அமைச்சர்களின் விபரங்கள்!!

● Élisabeth Borne  : கல்வித்துறை இணை அமைச்சர் (ministre d'État chargé de l'Éducation)

● Bruno Retailleau  : உள்துறை அமைச்சர் (ministre d'État chargé de l'Intérieur )

● Gérald Darmanin : நீதித்துறை மற்றும் மாநில அமைச்சர் ( ministre d'État, garde des Sceaux, en charge de la Justice )

● Roland Lescure : பொருளாதாரம் மற்றும் நிதி, தொழில்துறை, எரிசக்தி அமைச்சர். ,(ministre de l’Économie, des Finances et de la Souveraineté industrielle et énergétique)

● Manuel Valls :  கடல்கடந்த நிர்வாக அலகுகளுக்கான அமைச்சர் (ministre d'État chargé de l'Outre-mer )

● Catherine Vautrin : தொழிலாளர், சுகாதாரம் ஒற்றுமை, குடும்பங்கள், சுட்யாட்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைச்சர். (ministre du Travail, de la Santé, des solidarités et des Familles, de l'Autonomie et des personnes handicapées)

● Bruno Le Maire : இராணுவ, முன்னாள் படைவீரர்களுக்கான அமைச்சர்.  (ministre d'État, chargé des Armées et des anciens combattants)

● Jean-Noël Barrot : ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளுக்கான வெளியுறவுக்கொள்கை அமைச்சர். (ministre de l'Europe et des Affaires étrangères)

● Rachida Dati ( கலாசார பாரம்பரியத்துக்கான அமைச்சர்.  (ministre de la Culture)

ஆகிய பிரதான துறைகள் உள்ளிட்ட 18 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
*******
அதேவேளை, முன்னர் எப்போதும் அரசாங்கத்தில் இருந்திராதNaïma Moutchou மற்றும்  Mathieu Lefèvre   ஆகிய இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

வர்த்தக‌ விளம்பரங்கள்