Paristamil Navigation Paristamil advert login

இந்த வார இறுதிக்குள் அரசாங்கத்தை அறிவிக்கவேண்டும்! - பிரதமருக்கு ஜனாதிபதி மக்ரோன் வலியுறுத்தல்!!

இந்த வார இறுதிக்குள் அரசாங்கத்தை அறிவிக்கவேண்டும்! - பிரதமருக்கு ஜனாதிபதி மக்ரோன் வலியுறுத்தல்!!

5 ஐப்பசி 2025 ஞாயிறு 16:16 | பார்வைகள் : 692


ஐந்தாம் குடியரசில் பதிவி வகித்த பிரதமர்களில், தனது அமைச்சர் பிரதிநிதிகளை அறிவிக்க அதிக காலம் எடுத்துக்கொண்ட பிரதமராக  Sébastien Lecornu உள்ளார்.  அவர் இவ்வார இறுதிக்குள் அமைச்சர்கள் பட்டியலை அறிவிக்கவேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

ஒக்டோபர் 5, இன்று ஞாயிற்றுக்கிழமை இதனை மக்ரோன் அறிவித்தார். Sébastien Lecornu பிரதமராக கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி பதவியேற்றார். இன்னும் நான்கு நாட்களில் ஒருமாத காலம் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை அவரது அமைச்சர் பிரதிநிதிகளை அவர் அறிவிக்கவில்லை. அதற்கிடையில் அவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றது.

25 தொடக்கம் 26 வரையான அமைச்சர் பிரதிநிதிகளை அவர் இவ்வாற இறுதிக்குள் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் பதவி மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

வர்த்தக‌ விளம்பரங்கள்