பஸ்ஸில் 6 மாத குழந்தையை மறந்த தந்தை !!
5 ஐப்பசி 2025 ஞாயிறு 14:19 | பார்வைகள் : 2679
Seine-Saint-Denis, Pierrefitte மற்றும் ஒபெர்வில்லியர் (Aubervilliers) இடையே ஓடும் பஸ்ஸில், ஒரு தந்தை தனது 6 மாத ஆண்குழந்தையை மறந்து விட்டுச் சென்றுள்ள சம்பவம் சனிக்கிழமை நடந்தது.
பிற்பகல் 4:30 மணியளவில், RATP ஊழியர்கள் 150-ஆம் எண் பஸ்ஸில் குழந்தையை தனியாக பசியுடன் காண, காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் குழந்தையை பாதுகாப்பாக கண்காணித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமரா வழியாக விசாரணை செய்ய, தந்தை பஸ்ஸில் ஏறி, குழந்தையை விட்டுவிட்டு இறங்கி சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தந்தை RATP-ஐ அழைத்து குழந்தையைப் பற்றிக் கேட்டுள்ளார். மாலை 6:30 மணிக்கு, பெற்றோர்கள் காவல் நிலையத்தில் குழந்தையை பெற்றுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான முடிவுகள் பொபினி நீதிமன்றத்தின் தீர்மானத்தின் கீழ் அமையும்.
குழந்தையின் பாதுகாப்பு குறித்த சட்டங்களை மீறினால், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் €30,000 அபராதமும் விதிக்கப்படலாம்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan