Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ்க்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

ஹமாஸ்க்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

4 ஐப்பசி 2025 சனி 08:09 | பார்வைகள் : 209


காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இல்லையென்றால், இதுவரை இல்லாத பேரழிவை சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு ஞாயிறு மாலை 6 மணி வரை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலக்கெடு விதித்துள்ளார்.

காசாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இறுதி ஒப்பந்த‌த்திற்கு ஹமாஸ் ஏற்காவிட்டால், இதுவரை யாரும் பார்த்திடாத மோசமான விளைவுகள் ஏற்படும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்