Paristamil Navigation Paristamil advert login

Pontoise : கத்திக்குத்தில் இளைஞன் பலி! - ஆயுததாரி கைது!!

Pontoise : கத்திக்குத்தில் இளைஞன் பலி! - ஆயுததாரி கைது!!

3 ஐப்பசி 2025 வெள்ளி 09:03 | பார்வைகள் : 364


18 வயதுடைய இளைஞன் ஒருவர், கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.  Pontoise (Val-d'Oise) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒக்டோபர் 1, புதன்கிழமை மாலை Hauts de Marcouville பகுதியில், வீதியில் வைத்து குறித்த இளைஞன் தாக்கப்பட்டார். கூரான சமையல் கத்தி ஒன்றின் மூலம் தாக்கப்பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை 2 ஆம் திகதி Val-d'Oise மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதலுக்குரிய காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த தகவலை கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்