Paristamil Navigation Paristamil advert login

உணவக ஊழியர்களுக்கு நற்செய்தி! - வரி நீக்கம்!!

உணவக ஊழியர்களுக்கு நற்செய்தி! - வரி நீக்கம்!!

3 ஐப்பசி 2025 வெள்ளி 09:03 | பார்வைகள் : 559


உணவகங்களில் உணவு பரிமாறுபவர்களுக்கு வழங்கப்படும் ’டிப்ஸ்’களுக்கு (Pourboires) வரி நீக்கம் செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி மக்ரோன் இதனை அறிவித்துள்ளார்.

உணவகங்களில் கட்டணங்கள் செலுத்தும்போது பரிமாறுபவர்களுக்கான டிப்ஸ் சேர்த்து வழங்கப்படுவது வழக்கம். மொத்த கட்டணத்தோடு அனைத்து வரிகளும் கட்டணங்களும் («toute la fiscalité et les charges») இணைக்கப்பட்டு பில் கட்டணம் செலுத்தப்படுகிறது. இதனால் உணவு பரிமாறுபவர்களுக்கு வழங்கப்படும் டிப்ஸில் இந்த வரி சேர்ந்துகொள்கிறது.

அதனை நீக்கி, வழங்கப்படும் டிப்ஸ் முழுமையான பரிமாறுபவர்களுக்கு செல்ல வேண்டும் எனும் நோக்கோடு இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  இதனால், உணவுக்கட்டணத்துக்கான வரி மட்டுமே அறவிடப்படும், டிப்ஸ் பணம் முழுமையாக உணவு பரிமாறுபவர்களுக்கு வழங்கப்படும்.

டிசம்பர் 31, 2025 ஆம் திகதி முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்