Paristamil Navigation Paristamil advert login

195,000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்!!

195,000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்!!

3 ஐப்பசி 2025 வெள்ளி 08:03 | பார்வைகள் : 389


ஒக்டோபர் 2, நேற்று வியாழக்கிழமை நாடுதழுவிய வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. இதில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேர் கலந்துகொண்டிருந்தனர்.

பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய, inter-union தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.  பரிஸ், Marseille , Montpellier , Bordeaux உள்ளிட்ட பல நகரங்களில், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 195,000 பேர் பங்கேற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதேவேளை, 600,000 பேர் பங்கேற்றதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் கல்விச்செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தன. ஆரம்பக்கல்வி நிலையங்களில் 6.95% சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தன. நடுத்தர மற்றும் உயர்கல்வி நிலையங்களில் 6.13% சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தன.

சென்ற செப்டம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஒரு மில்லியன் வரையானவர்கள் கலந்துகொண்டமையும், 17.06% சதவீதமான கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்