Paristamil Navigation Paristamil advert login

இளம்பெண்களை கண்காணிக்க வடகொரியா உத்தரவு

இளம்பெண்களை கண்காணிக்க வடகொரியா உத்தரவு

2 ஐப்பசி 2025 வியாழன் 16:26 | பார்வைகள் : 177

மார்பக விரிவாக்க சிகிச்சை செய்துள்ள பெண்களை கண்காணிக்க வடகொரியாவில் உத்தரவிடப்பட்டுள்ளது.

வடகொரியா பொதுவாகவே மேற்கத்திய கலாச்சாரம் தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு.

அங்கு, ஜீன்ஸ் அணிவது, ஹைஹீல்ஸ் அணிவது, குட்டை பாவாடை அணிவது, பாப் பாடல்கள் கேட்பது போன்றவற்றுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு மார்பக விரிவாக்கம் போன்ற அறுவை சிகிச்சைகளும் செய்ய சட்டப்பூர்வ தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும் 20 வயதுடைய 2 இளம்பெண்களும் மார்பக விரிவாக்க அறுவை சிகிச்சை செய்ததற்காக பொது விசாரணையை எதிர்கொண்டனர்.

இதனை விசாரித்த கடுமையான தண்டனை வழங்க உள்ளதாக உறுதியளித்தார்.

அதைத்தொடர்ந்து, வட கொரியாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் நகர பொதுப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில், அழகுக்காக சிகிச்சை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்களை அடையாளம் காண கண்காணிப்பு குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க அளவில் உடலில் மாற்றம் ஏற்பட்ட பெண்களை அடையாளம் கண்டு, அவர்கள் மார்பக விரிவாக்கம் அல்லது இரட்டை கண் இமை அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்த பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்