இந்திய ஜனநாயகம் மீது நடத்தப்படும் தாக்குதல்: கொலம்பியா பல்கலையில் ராகுல் பேச்சு

3 ஐப்பசி 2025 வெள்ளி 06:37 | பார்வைகள் : 106
ஜனநாயகம் மீது அனைத்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுவதே இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால்,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் பேசினார்.
கொலம்பியா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் அங்குள்ள இஐஏ பல்கலையில் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது: இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ளனர். அதேநேரத்தில் சீனாவை விட முற்றிலும் மாறான அமைப்பு இந்தியாவில் உள்ளது. மையப்படுத்தப்பட்ட அமைப்பை கொண்டதாகவும் சீனா உள்ளது. இந்தியாவோ பரவலாக்கப்பட்டதாகவும், பல மொழிகள், கலாசாரங்கள், மரபுகள் மற்றும் மதங்களை கொண்ட அமைப்பாக உள்ளது. மிகவும் சிக்கலான அமைப்பை இந்தியா கொண்டுள்ளது.
இந்தியா பல சவால்களில் இருந்து வெளியே வர வேண்டியுள்ளது. அனைத்து திசைகளில் இருந்தும் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவது இந்தியாவுக்கு உள்ள மிகப்பெரிய சவால் ஆகும். பலவகையான பாரம்பரியம், மதம் மற்றும் கொள்கைகளுக்கு உரிய இடம் தேவை. இந்த இடத்தை உருவாக்கும் சிறந்த முறையை கொண்ட அமைப்பே ஜனநாயக அமைப்பு. ஆனால், இந்தியாவில்அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
சீனா செய்வதை போல் நாம் செய்ய முடியாது. மக்களை அடக்கி ஒரு சர்வாதிகார அமைப்பை சீனா நடத்துகிறது. அந்த மாதிரியை இந்தியா ஏற்றுக்கொள்ளாது.சீனாவுக்கு அண்டை நாடாகவும், அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடாகவும் இந்தியா இருக்கிறது. பெரிய சக்திகள் மோதிக்கொள்ளும் இடத்திற்கு நடுவில் நாம் இருக்கிறோம். பொருளாதார ரீதியில் நாம் வளர்ந்தாலும், நாம் சேவை சார்ந்த பொருளாதாரம் மற்றும் உற்பத்தி செய்ய முடியாததால் அதிகளவில் வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்க முடியவில்லை.
அமெரிக்காவில் உற்பத்தி துறையில் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர். ஜனநாயகமற்ற சூழலில் சீனா தனது உற்பத்தி திறனை நிரூபித்துள்ளது. ஆனால், நமக்கு ஒரு ஜனநாயக அமைப்பு தேவை. எனவே சீனாவுடன் போட்டி போடக்கூடிய ஒரு ஜனநாயக சூழலில் உற்பத்தி மாதிரியை உருவாக்குவதே நமக்கு உள்ள மிகப்பெரிய சவால். இவ்வாறு ராகுல் பேசினார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1