ரஷ்ய விமானங்கள் எல்லை மீறினால் - பழிவாங்குவோம்! - மக்ரோன் சூழுரை!!

2 ஐப்பசி 2025 வியாழன் 09:26 | பார்வைகள் : 604
“ஒரு ரஷ்ய விமானம் மீண்டும் ஐரோப்பிய வான்வெளியை மீறினால், பழிவாங்கும் நடவடிக்கை கட்டாயம் இடம்பெறும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முறைசார ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில் வைத்து தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களில், ரஷ்ய விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் ஐரோப்பிய யூனியனின் கிழக்கு எல்லைகளை மீறி உள்ளே நுழைந்தது. குறிப்பாக போலந்து, ரோமேனியா, எஸ்டோனியா போன்ற நாடுகளில் இது நடந்துள்ளது. டென்மார்க்கில் ரஷ்ய ட்ரோன்கள் இரண்டாவது நாளாக மிலிட்டரி பகுதிகளை மேல் பறந்ததாக கூறப்படுகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கையில் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் ரஷ்யா மீறல் தொடர்ந்தால், ஐரோப்பிய நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளன
இந்நிலையில் நேற்று ஒக்டோபர் 1, புதன்கிழமை டென்மார்க்கில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இதில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதன்போது ஜனாதிபதி மக்ரோன் இதனை தெரிவித்தார்.
ஐரோப்பிய எல்லைகளை சீண்டவேண்டாம் எனவும், பதிலடி கொடுப்பதற்கு எதுவும் தடையாக இருக்காது எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1