இளஞ்சிவப்பு நிறத்தில் - ஈஃபிள்!!

2 ஐப்பசி 2025 வியாழன் 07:02 | பார்வைகள் : 422
‘பிங் ஒக்டோபர்’ என கருதப்படும் இந்த மாதத்தின் முதல் நாளான நேற்று புதன்கிழமை, ஈஃபிள் கோபுரம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரவிடப்பட்டது.
”மார்பக புற்றுநோய்” தொடர்பான விழிப்புணர்வு நோக்கத்துடன் ஈஃபிள் கோபுரம் நேற்று ஒக்டோபர் 1, சனிக்கிழமை இரவு ஒளிரவிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. சென்ற ஆண்டு பாராளுமன்றம் உள்ளிட்ட பல கட்டிடங்களில் இளஞ்சிவப்பு நிறம் ஒளிரவிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிரான்சில் வருடத்துக்கு 10,000 இற்கும் மேற்பட்டோர் மார்பக புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர். 2022 ஆம் ஆண்டில் 65,659 பேருக்கு மார்பக புற்றுநோய் அடையாளம் காணப்பட்டது. அத்தோடு அவ்வருடத்தில் 14,739 பேர் உயிரிழந்திருந்தனர்.
சுகாதார காப்பீடு திட்டத்தில் 50 தொடக்கம் 74 வயது வரையுள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் பரிசோதனை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை இடம்பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1