மனிதாபிமான உதவியாளர்களுடன் காஸாவுக்கு படையெடுத்த படகுகள்! - தடுத்து நிறுத்திய இஸ்ரேல்!!

2 ஐப்பசி 2025 வியாழன் 04:42 | பார்வைகள் : 399
பிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட 37 நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமான உதவியாளர்களுடன் காஸாவுக்குச் சென்ற படகுகளை இஸ்ரேலிய இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
”Global Sumud Flotilla” எனும் தன்னார்வ அமைப்பின் 43 படகுகள் காஸா நோக்கி புறப்பட்டதாகவும், 40 மணித்தியாலங்கள் கழித்து அவை காஸா கடற்பரப்பைச் நேற்று ஒக்டோபர் 1, புதன்கிழமை சென்றடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாக 201 பேர் பயணித்ததாகவும், 13 படகுகள் இதுவரை இஸ்ரேலிய துருப்புக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 30 படகுகள் காஸாவை நெருங்கியுள்ளதாகவும்,, அடுத்த ஒருசில மணிநேரங்களில் அவை காஸாவை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து பல ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
“இஸ்ரேல் நாட்டைத் தடை செய்யுங்கள், உலகப் பொருளாதாரத்தை முடக்குங்கள். கடற்படையின் பணியை முடிப்போம்: முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், காசாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்!" என Global Sumud Flotilla அமைப்பின் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
201 பேரில் ஐரோப்பிய பாராளுமன்ற பிரெஞ்சு உறுப்பினர் Emma Fourreau உள்ளிட்ட 10 பிரெஞ்சு நபர்கள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1