உக்ரைனுக்கு ரகசிய விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசி

1 ஐப்பசி 2025 புதன் 12:30 | பார்வைகள் : 287
பிரித்தானிய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இளவரசி ஆன் உக்ரைனுக்கு ரகசிய விஜயம் மேற்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர் சார்லஸின் சகோதரியான இளவரசி ஆன், செவ்வாய்க்கிழமை முழுவதும் உக்ரைனில் செலவிட்டுள்ளார்.
ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இளவரசி ஆன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்துள்ளதுடன், போரில் கொல்லப்பட்ட சிறார்களின் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ரஷ்ய படையெடுப்பின் நெருக்கடியில் வாழும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இளவரசி ஆன் முன்னெடுத்துள்ள பயணம் வடிவமைக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இளவரசி சோஃபி உக்ரைனுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இரண்டாவது அரச குடும்பத்து உறுப்பினராக இளவரசி ஆன் உக்ரைன் பயணப்பட்டுள்ளார்.
செப்டம்பர் தொடக்கத்தில் இளவரசர் ஹரியும் உக்ரைனுக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டிருந்தார். ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பின் போது உக்ரைனுக்கு பிரித்தானியா அளிக்கும் ஆதரவு மற்றும் அந்நாட்டின் தொடர்ச்சியான தற்காப்பு குறித்து இளவரசி ஆன் விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சார்லஸ் மன்னர் உக்ரைனுக்கான தமது ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் விவாதித்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.
உக்ரைனின் முதல் பெண்மணி ஜெலென்ஸ்கா உடன் சிறார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ள இளவரசி ஆன், பெண் காவல்துறை மற்றும் ஆயுதப்படை பிரதிநிதிகளையும் சந்தித்தார், மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அவர்களின் முக்கிய பங்கு பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் அவர் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிட்டார். ரஷ்ய அதிகாரிகளால் ரஷ்யாவிற்கும் உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் வலுக்கட்டாயமாக மாற்றப்பட்ட அல்லது நாடு கடத்தப்பட்ட 19,500 க்கும் மேற்பட்ட உக்ரேனிய குழந்தைகளுக்கு உதவ இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
இளவரசர் ஹரியைப் போலவே, இளவரசி ஆன் போலந்து சென்று, அங்கிருந்து ரயில் மூலம் உக்ரைன் தலைநகருக்கு பயணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1