குடியேற்றவாதிகளை ’பங்குபோடும்’ ஐரோப்பா!!

1 ஐப்பசி 2025 புதன் 12:48 | பார்வைகள் : 1691
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள், அகதிகளை பங்குபோட்டுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாக 30,000 அகதிகளை 27 நாடுகள் பிரித்து உள்வாங்க உள்ளன.
இவ்வருட கிறிஸ்மஸ் காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 2024 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், அகதிகளின் வருகை மற்றும் நாட்டின் பரப்பளவு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாடுகளுக்கும் அகதிகள் பிரித்து அனுப்பட உள்ளனர். 30,000 அகதிகளை 27 நாடுகள் பிரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு ஏற்றுக்கொள்ளாவிட்டால், அகதி ஒருவருக்கு 20,000 யூரோக்கள் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இத்தாலி, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவில் அகதிகள் வருகையை எதிர்கொள்கின்றனர். இந்த சுமையை குறைப்பதற்காக இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1