மீண்டும் அதிகரித்த சிறைக்கைதிகளின் எண்ணிக்கை!!

1 ஐப்பசி 2025 புதன் 11:48 | பார்வைகள் : 505
ஒவ்வொரு மாதமும் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை விபரங்களி வெளியிடப்பட்டு வருகிறமை அறிந்ததே. கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி நிலவரப்படி பிரெஞ்சு சிறைச்சாலைகளில் 84,311 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் 62,614 கைதிகளுக்கான இட வசதிகள் மட்டுமே உள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த சில வருடங்களுகு முன்பாகவே முழுமையடைந்து, போதிய இடவசதி இன்றி கைதிகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். 134.7% சதவீத கைதிகள் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 24 சிறைச்சாலைகளில் 200% சதவீதமும், 66 சிறைச்சாலைகளில் 150% சதவீதமும் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12 மாதங்களில் 5,342 கைதிகள் அதிகரித்துள்ளனர்.
ஐரோப்பாவில் சிறைச்சாலை இட ஆக்கிரமிப்பில் பிரான்ஸ் மிகவும் மோசமான ஒரு நிலையில் உள்ளது. ஸ்லோவேனியா, சைபிரஸ் போன்ற நாடுகளுக்கு பின்னால் மூன்றாம் இடத்தில் பிரான்ஸ் உள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1