Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில் இடிந்து விழுந்த பாடசாலை - 3 மாணவர்கள் பலி

இந்தோனேசியாவில் இடிந்து விழுந்த பாடசாலை - 3 மாணவர்கள் பலி

1 ஐப்பசி 2025 புதன் 11:30 | பார்வைகள் : 219


இந்தோனேசியாவில் பாடசாலை கட்டிடமொன்று இடிந்து விழுந்து பாரிய விபத்துக்குள்ளானதில் 13 வயது சிறுவன் உள்பட 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டிடத்தின் மேல் தளம் திடீரென இடிந்து விழுந்ததில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களில் 13 வயது சிறுவன் உள்பட 3 மாணவர்கள் பலியாகி உள்ளனர்.

அத்துடன் 99 மாணவர்கள் காயமடைந்தனர். 91 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இடிபாடு பகுதிகளுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.

எனினும், காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கட்டிடம் பலவீனமடைந்து காணப்படுகிறது. இதனால், அதிக கனம் மிகுந்த சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது.

பொலிஸார், மீட்பு பணியாளர்கள் மற்றும் வீரர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இரவிலும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்