அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக கொள்கை

1 ஐப்பசி 2025 புதன் 11:30 | பார்வைகள் : 206
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக கொள்கைகளினால், அந்நாட்டு அரச ஊழியர்கள், 3 இலட்சம் பேர் இந்தாண்டு இறுதிக்குள் இராஜினாமா செய்யவுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக 30.09.2025 ஒரு இலட்சம் பேர் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் நிர்வாக செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக தானாக முன்வந்து அரச ஊழியர்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்வதை இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
அவர் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து, இன்று ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான அரசஊழியர்களின் இராஜினாமா இன்று நடைபெறவுள்ளது. இந்த எண்ணிக்கை இந்தாண்டு இறுதிக்குள் 3 இலட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்பின் கொள்கைகள், பெண்கள் மற்றும் சிறுபான்மை இன ஊழியர்களை பெரியளவில் பாதித்துள்ளது. கடந்த ஜூன் மாத இறுதிக்குள், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட கறுப்பின பெண்கள் தங்கள் வேலைகளை விட்டு வெளியேறினர்.
முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் நீண்டகால ஊழியர்கள் வெளியேறுவதால், அரசின் நிர்வாக அறிவும், நிபுணத்துவமும் பெரியளவில் இழக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், இதை மீண்டும் கட்டியமைக்க பல ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.அரச ஊழியர்களின் இந்த இராஜினாமாவால் பல முக்கிய அரச சேவைகள் தீவிரமாக பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1