தேஜ கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும்; பாஜவுக்கு பெருகிய ஆதரவு; கருத்துக்கணிப்பில் தகவல்
29 ஆவணி 2025 வெள்ளி 13:48 | பார்வைகள் : 1675
தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடந்தால் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இண்டி கூட்டணிக்கு பின்னடைவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் பாஜ மொத்தம் உள்ள 543 இடங்களில் 240 இடங்களை மட்டுமே பெற்றது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவால் 293 இடங்களுடன் 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அதேவேளையில், இண்டி கூட்டணி 234 இடங்களை பிடித்தது.
இந்த நிலையில், இண்டியா டுடே மற்றும் சி வோட்டர் மூட் இணைந்து, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஆக., 14ம் தேதி வரையில் தேசிய அளவில் கருத்துக் கணிப்பை நடத்தியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 2,06,826 பேரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன.
அதன்படி, இன்றைய தேதியில் தேர்தலை நடத்தினால் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இண்டி கூட்டணிக்கு 208 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, என்டிஏ கூட்டணியை பொறுத்தவரையில் 2024 லோக்சபா தேர்தலில் 44 சதவீத ஓட்டுகளைப் பெற்ற நிலையில், தற்போது 46.70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2.70 சதவீதம் கூடுதலாகும்.
பாஜவை பொறுத்தவரையில 2024 லோக்சபா தேர்தலில் 240 இடங்களில் மட்டுமே வென்றிருந்து பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாக இருந்தது. இந்த நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்பில் 260 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசை பொறுத்தவரையில், 2024 லோக்சபா தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இது தற்போது 97 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.ஆப்பரேஷன் சிந்தூர், பீஹார் ஓட்டு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்குப் பிறகு, பாஜவுக்கு ஆதரவு பெருகி வருவதே இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan