கனடாவில் படகு கவிழ்ந்தில் இருவர் மாயம்

28 ஆவணி 2025 வியாழன் 10:57 | பார்வைகள் : 1199
கனடாவின் அப்பர் கானனாஸ்கிஸ் ஏரியில் ஒரு கேனோ படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் மாயமாகியுள்ளனர்.
இந்த படகில் மொத்தமாக நான்கு பேர் பயணம் செய்திருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்றதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் படகுகள் மற்றும் பேடல் போர்டுகளை பயன்படுத்தி 30 வயது ஆண் ஒருவரையும் 34 வயது பெண்ணையும் மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் 30 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆகிய இருவரும் மாயமாகியுள்ளனர்.
ஒருநாள் முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பலத்த காற்று காரணமாக தேடுதல் பணிகள் இடை நிறுத்தப்பட்டன. இன்றைய தினமும் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படகில் இருந்த நால்வரும் சர்வதேச சுற்றுலா குழுவொன்றைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
படகில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிர்காக்கும் அங்கிகளை (லைஃப் ஜாக்கெட்) அணிந்திருக்கவில்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்பர் கானனாஸ்கிஸ் ஏரி, கல்கரி நகரத்திலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் தென்-மேற்கே அமைந்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1