இலான் ஹலிமி : மரத்தை வெட்டிய இருவர் கைது!!
28 ஆவணி 2025 வியாழன் 06:00 | பார்வைகள் : 6514
யூத விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்ட இலான் ஹலிமி நினைவாக Épinay-sur-Seine நகரில் நடப்பட்ட மரம் ஒன்று வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது.
இந்த சமூகவிரோத செயலில் ஈடுபட்டிருந்தவர்களை காவல்துறையினர் தேடப்பட்டு வந்த நிலையில், 19 வயதுடைய இரட்டையர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். அரச வழக்கறிஞர் அலுவலகம் இதனை நேற்று ஓகஸ்ட் 27, புதன்கிழமை அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டுவாரங்களின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள், அவர்களின் குடியுரிமை விபரங்கள் வெளியிடப்படவில்லை.
"Alcobendas தோட்டத்தில் ஏராளமான பைன் மரங்கள் உள்ளன. ஆனால் குறித்த மரம் 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட இலான்ஹலிமி நினைவாக நடப்பட்டது." என Épinay-sur-Seine நகர முதல்வர் குறிப்பிட்டார்.
23 வயதுடைய ஹலிமி, 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு 24 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர் எனும் காரணத்துக்காக கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan