Paristamil Navigation Paristamil advert login

சிறுவர்களுக்கு சமூகவலைத்தளம் பயன்படுத்த தடையா.. - கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு!!

சிறுவர்களுக்கு சமூகவலைத்தளம் பயன்படுத்த தடையா.. - கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு!!

27 ஆவணி 2025 புதன் 16:43 | பார்வைகள் : 1576


 

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாக ஒருவாரத்துக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், கல்வி அமைச்சர் Elisabeth Borne சில திட்டங்களை அறிவித்துள்ளார்.

பாடசாலையில் இடம்பெறும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் சிலவற்றை அமைச்சர் அறிவித்துள்ளார். அதில் ஒரு பகுதியாக நடுத்தரவகுப்பு மாணவர்கள் தொலைபேசியை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பிரான்சில் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் திட்டம் ஒன்று தொடர்பிலும் ஆலோசித்து வருவதாகவும் இன்று ஓகஸ்ட் 27, புதன்கிழமை அறிவித்தார்.

இவ்வருட மார்ச் மாதத்தின் பின்னர் பாடசாலை விடுமுறைவரையான காலத்தில் 400 கூர்மையான ஆயுதங்கள் மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மொத்தமாக 6,200 தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்