பாலாவுக்கு ஜோடியாக நடிக்க இத்தனை ஹீரோயின்கள் மறுத்தார்களா?

27 ஆவணி 2025 புதன் 14:49 | பார்வைகள் : 801
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்குள் இருக்கும் நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி புகழ் பெற்றவர் பாலா. இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பேமஸ் ஆனதைவிட சமூக சேவைகள் செய்து பேமஸ் ஆனது தான் அதிகம். தனக்கு கிடைக்கும் காசு மொத்தத்தையும் பிறருக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தி வருகிறார் பாலா. இவர் செய்த உதவியால் ஏராளமான ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மாறி இருக்கிறது. மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தது முதல் முதியோருக்கு வீடு கட்டிக் கொடுத்தது வரை இவர் செய்த உதவிகள் ஏராளம்.
இது வரை சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த பாலா, தற்போது ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். அவர் நாயகனாக நடித்துள்ள படத்தின் பெயர் காந்தி கண்ணாடி. அப்படம் வருகிற செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தில் நடிகர் பாலாவுக்கு ஜோடியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார். அப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது அப்படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் ஷெரிப் ஒரு பகீர் தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.
அவர் கூறியதாவது : “காந்தி கண்ணாடி படத்திற்காக பாலா தன்னுடைய உடல் எடையை அதிகரித்து நடித்திருக்கிறார். 50 கிலோ இருந்த அவர் இப்படத்திற்காக நான்கு மாதங்களில் 75 கிலோ வந்தார். இந்தப்படத்தின் கதையை ஏராளமான ஹீரோயின்களிடம் சொல்லி இருக்கிறேன். கதையை கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என சொல்வார்கள். ஹீரோ பாலா என்று சொன்னதும், எனக்கு டேட்ஸ் இல்லை, கொஞ்சம் டைம் வேணும் என பல்வேறு காரணங்களை சொல்லி நிராகரித்துவிடுவார்கள். சிலர் அப்புறம் சொல்கிறேன் என சொல்லிவிட்டு, பின்னர் போன் போட்டால் எடுக்கவே மாட்டார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு லேட் ஆக தொடங்கப்பட்டதற்கு ஹீரோயின் கிடைக்காததும் ஒரு காரணம் தான். பாலாவுடன் நடிக்க மறுத்து 50 பேர் விலகிவிட்டார்கள். 51வது நபராக வந்த நமீதா கிருஷ்ணமூர்த்தி தான் இப்படத்தின் நாயகி ஆனார். நான் ஒரே நாளில் 12 ஹீரோயின்களுக்கெல்லாம் கதை சொல்லி இருக்கிறேன். அனைவரும் பாலா ஹீரோ என்று சொன்னதும் ரிஜெக்ட் பண்ணி இருக்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் கூறி இருந்தார் இயக்குனர் ஷெரிப். காந்தி கண்ணாடி திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1