பரிஸ் : பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட இரு சிறுவர்கள் கைது!!
27 ஆவணி 2025 புதன் 13:42 | பார்வைகள் : 2277
பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்ட இரு சிறுவர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
15 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் ‘இஸ்லாமிய பயங்கரவாத’ அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் கறுப்பு இணையமூடாக ஆயுதங்களை கொள்வனவு செய்ய முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளில் அவர்கள் பரிசில் சுற்றுலாப்பயணிகள் கூடும் பொது இடங்களில் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 29 ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இருவரில் ஒருவர் 2010 ஆம் ஆண்டு Val-de-Marne மாவட்டத்திலும், மற்றையவர் 2008 ஆம் ஆண்டு பரிசிலும் பிறந்தவர்கள் எனவும் அவர்கள், அரேபிய இஸ்லாமியத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் ஈஃபிள் கோபுரத்தில் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan