டொரொன்டோவில் இ-ட்ரான்ஸ்ஃபர் மோசடி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை
27 ஆவணி 2025 புதன் 08:11 | பார்வைகள் : 944
கனடாவின், டொரொன்டோவில் இடம்பெறும் மோசடி சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டொரொன்டோவில் இ-ட்ரான்ஸ்ஃபர் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, மோசடி செய்பவர்கள் வணிக வளாகங்கள் மற்றும் பிற பொது இடங்களில் பாதிக்கப்பட்டவர்களை அணுகுகின்றனர்.
இந்த மோசடியின் ஒரு பகுதியாக, ஒரு சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களை அணுகி, பணத்திற்கு பதிலாக 10 டொலர் அல்லது 20 டொலரை இ-ட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்புமாறு கேட்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் அலைபேசியை பெற்று சந்தேக நபர் 3,000 டொலர்கள் வரை தனது சொந்த கணக்கிற்கு மாற்றியுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர், சந்தேக நபர் செல்போனை பாதிக்கப்பட்டவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பி ஓடு விடுவதாகத் தெரிவிக்கபப்டுகின்றது.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு குறிவைக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இ-ட்ரான்ஸ்ஃபர் செய்யும்போது உங்கள் அலைபேசிகளை எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேறும் நபர்கள் உங்கள் செல்போனில் உள்ள வங்கி தகவல்களை அணுக அனுமதிக்காதீர்கள்,” என பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இந்த மோசடி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 416-808-3300 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan