Paristamil Navigation Paristamil advert login

தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரணில்

தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரணில்

26 ஆவணி 2025 செவ்வாய் 16:20 | பார்வைகள் : 786


பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார்.

தனது மருத்துவ சிகிச்சை முடித்த பின்னர் நாட்டுமக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்